பாலக்காடு : பாலக்காடு அருகே, பைக் மீது பஸ் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி ஆரியம்கடவு பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரதீஷ், 22. இவரது தாய் ராசாத்தியுடன், 58, வடக்கஞ்சேரிக்கு பைக்கில் நேற்று சென்ற போது, எதிரே வந்த சுற்றுலா பஸ் மோதியது.
இதில் சாலையில் விழுந்த ரதீஷின் தலையில், பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ராசாத்தியை, அப்பகுதி மக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரதீஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து, வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.