பைக் டாக்சி ஓட்டுநர்கள் போலீஸ் கமிஷனரிடம் மனு : 25 ஆயிரம் களப்பணி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பாதுகாப்பு கோரி

0
12

கோவை, டிச.17: கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின், கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அச்சங்கத்தின் மண்டல செயலாளர் ரா.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், மாநில அமைப்பு செயலாளர் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மின்வாரியத்தில் உள்ள 25 ஆயிரம் களப்பணி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 2009ல் மின்வாரிய பணியில் இருந்த களப்பணி உதவியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும், களப்பணியாளர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளையும், தேவையான மின்னணு சாதனங்களை வழங்கிய பின்னரே புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.