பேராசிரியர்களுக்கு நேரு குழுமம் கவுரவம்

0
15

கோவை; நேரு கல்விக் குழுமத்தின் சார்பில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசு, தனியார் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பாக பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது

16வது ஆண்டு விருது வழங்கும் விழா, நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமையில், திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.

மனோன்மணியம் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கம், 10 முதுநிலை மற்றும் எட்டு இளநிலைப் பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

பாரதியார் பல்கலை பொன்பாண்டியன், ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் மாறன், அழகப்பா பல்கலையின் வீரா ரவி ஆகிய பேராசிரியர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நேரு கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குநர் நாகராஜா, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் அனிருதன் பங்கேற்றனர்.