பெரிய நாயக்கன் பாளையம் வட்டாரத்தில் கனமழை

0
7

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் குளம், குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்தது.

வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கன மழை பெய்தது. இதனால் மலையோரங்களில் உள்ள சிற்றோடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி, பிரஸ்காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருகிய மழை நீர், சாக்கடையில் வழிந்து ஓடி சின்னமத்தம்பாளையத்தில் உள்ள தடுப்பணையை வந்து அடைந்தது.

தடுப்பணியில் ஏற்கனவே கழிவு நீர் கலந்து இருந்ததால், தண்ணீரில் நுரை பெருகி, அப்பகுதியில் முழுவதும் பறந்து ஓடியது.

இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில்,’ தற்போது பெய்த மழை, காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். மேலும், தென்னை, வாழை உள்ளிட்ட மர பயிர்களுக்கும் உதவியாக இருக்கும்’ என்றனர்.