போத்தனூர் : கோவை, பொங்கல் முன்னிட்டு கோவைபுதூரில் இசைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து, 20 வயது பெண் ஒருவர், சாலையில் நடந்து சென்றார். பைக்கில் வந்த ஒருவர், அப்பெண்ணை வழிமறித்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்பெண் சத்தமிடவும், அந்நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்குப்பின், அப்பெண்ணின் வீட்டிற்கு மேலும் இருவருடன் சென்ற அந்நபர், அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
அப்பெண் அளித்த புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, கோவைபுதூர், தொட்டராயன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணன் 36, அமாசை கவுண்டர் வீதியை சேர்ந்த ரவி, 19 கர்நாடகாவை சேர்ந்த பாபு, 23 ஆகியோரை கைது செய்தனர். பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.