கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் தனது வீட்டில் உள்ள குளித்து கொண்டிருந்தார். அப்போது அப்போது குளியலறை ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பது தெரிந்தது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயத்தில் கூச்சல் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அந்த பெண்ணின் மகன் மற்றும் அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனால் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அந்த பெண்ணின் மகன் அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர், அவரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அந்த நபரின் செல்போன் கீழே விழுந்தது.அந்த செல்போனை எடுத்து பார்த்ததில், அதில் அந்த பெண் குளித்து கொண்டிருந்த வீடியோ பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் தனது செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சந்தோசை தேடி வருகின்றனர்.