பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, கோவை மாநகர போலீசார் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணியில், ஏராளமானோர் பங்கேற்றனர்
கோவை மாநகர காவல் துறையின், 35வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் துவக்கி வைத்து, சைக்கிள் பேரணியில் பங்கேற்றார்.
பேரணியில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என, 200க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசார் மொத்தம், 35 கி.மீ., துாரம் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி செல்வபுரம், பேரூர், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், மருதமலை, வடவள்ளி, கவுலி பிரவுன் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம் வழியாக வந்து, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள, பி.ஆர்.எஸ்., பயிற்சி பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது.