பெண்கள் இருவருக்கு நடு ரோட்டில் பாலியல் சீண்டல் ; ஒரு வாலிபர் கைது

0
76

கோவை; வடவள்ளி, நவாவூர் பிரிவை சேர்ந்தவர் 30 வயது பெண்; காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்து வருவதற்காக, நேற்று முன்தினம் மாலை, வடவள்ளி, மருதமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடினார்.

பெண் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தவறாக நடந்து கொண்டது, திருநெல்வேலி மாவட் டத்தை சேர்ந்த சோபின்ஸ்,19 என்பது தெரியவந்தது. போலீசார் சோபின்ஸை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 22 வயது பெண், சரவணம்பட்டியில் தங்கியிருந்து, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணி முடிந்து தனது நண்பருடன் சரவணம்பட்டி, சத்தி ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர், இருசக்கர வாகனத்தை பெண் மீது இடிப்பது போல் வந்தார். அருகில் வந்த அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.

சரவணம்பட்டி போலீசில் பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்