பூத் கமிட்டி கூட்டம்; அ.தி.மு.க., தீவிரம்

0
39

அ.தி.மு.க., சார்பில் சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பேரூராட்சி, ஊராட்சிகளின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கூட்டம், கணியூர், முதலிபாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் நடந்தது.

எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ” ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் தேர்தல் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். வீடு, வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளையும், நலத் திட்டங்களையும் பிரசாரம் செய்யவேண்டும். தி.மு.க., ஆட்சியின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.