கோவை; ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில், நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை நோய் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை சார்பில், மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை மற்றும் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை குறித்த, ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நடந்தது.
நுரையீரல் துறையின் முக்கிய நிபுணர்களான டாக்டர்கள் பட்டாபிராமன், ரிதேஷ் அகர்வால், இந்தர்பால் சிங் சேகல் ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் சிறப்பரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட நுரையீரல் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
நுரையீரல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட, நோயாளிகளுக்கான பராமரிப்பு தரத்தை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வை அதிகரிக்கவும், மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த கருத்தரங்கு அமைந்தது. ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.