கோவை; கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விதமாக, புரோஜோன் மாலில், 50 அடி கிறிஸ்துமஸ் ட்ரீ அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்காலங்களை முன்னிட்டு, புரோஜோன் ‘எ வெரி பியரி கிறிஸ்துமஸ்’ என்ற பெயரில் கோவையில், முதல் முறையாக நகரின் மிக உயரமான கிறிஸ்துமஸ் ட்ரீ அமைத்துள்ளது. செல்பி ஜோன்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை(இன்று) புரோஜோன் ஜங்கிள் ஜாய்ஸ், குழந்தைகளுக்கான பேஷன் ஷோ, டிராயிங் மற்றும் பெயிண்டிங் போட்டி, புரோஜோன் சான்டா கிட்ஸ் பலூன் ரன் சீசன், ஓட்டபந்தயம், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை புரோஜோன் கரோல், 27 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை உணவு திருவிழா, டிச., 31 ம் தேதி இரவு, 2025 புத்தாண்டை ‘டிஜே நைட்’, லைவ் இன் கான்சர்ட்டும் நடத்தப்படுகிறது. அன்று செலிபிரட்டி நைட் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் நடக்கின்றன. குழந்தைகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
விழாக்கால சலுகையாக மாலில் உள்ள, 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மீது, 50 சதவீத தள்ளுபடி விற்பனையும் நடக்கிறது. ரூ.499 மதிப்பிலான பொருட்கள் வாங்குவோருக்கு, ரூ.10 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்படும்.
புரோஜோன் மால் மைய இயக்குனர் அம்ரிக் பனேசர், செயல்பாட்டுத் தலைவர் முசாமில் ஜிங்ரு, விற்பனைப்பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் சகாயநாதன், தொழில்நட்ப தலைவர் எஸ்வந்த் ராவ் இத்தகவலை தெரிவித்தனர்.