புத்தாண்டு கொண்டாட 21 கிலோ கஞ்சா பதுக்கிய ஒருவர் கைது

0
10

கோவை; கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில், இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம், சின்னவேடம்பட்டி குளம் பகுதியில், ரோந்து சென்ற போது அங்கிருந்த சிலர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினர். அதில் மாரி மனோஜ் குமாரை, 22, போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்த மூட்டையில், சுமார் 21.200 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை பயன்படுத்தி, இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும், வெளி மாவட்டத்தில் இருந்து 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, கோவையில் விற்பனை செய்யவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் மாரி மனோஜ் குமாரை கைது செய்தனர். கவுதம், அஷ்வின், பாபு, ரவீந்திரன், மோகன், சிவா, ராகேஷ் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.