புதிய ரேஷன் கடை திறப்பு

0
13

சோமனூர், டிச. 17: கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளத்துப்பாளையத்துக்கு தனியாக ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். கோவை மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதியுடன் பொதுமக்கள் சார்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் ஏற்பாட்டில் கட்டப்பட்ட இந்த ரேஷன் கடையை நேற்று அவர் திறந்து வைத்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தந்ததற்கு ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கிட்டாம்பாளையம் கூட்டுறவு வங்கி செயலாளர் கலாமணி, வார்டு உறுப்பினர்கள் சாந்தி, தங்கமணி, ஐடிவிங் ரமேஷ், ஆசிரியர் முத்துச்சாமி, தங்கவேல், சமூக ஆர்வலர் வெற்றிவேல், பாலசுப்பிரமணியம், முத்துச்சாமி, ராம் லட்சுமனன் அறக்கட்டளை தலைவர் ராம்வேல், சக்தி, கதிர்வேல், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.