புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

0
93

பொள்ளாச்சி சரகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த தமிழ்மணி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூரில் பயிற்சி துணை துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த தீபசுஜிதா, பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை முழுமையாக தடை செய்யப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தீப சுஜிதா தெரிவித்தார்.