புதிதாக கட்டிடம் கட்டுவோருக்கு சொத்துவரி உயர்வு எவ்வளவு?

0
63

புதிதாக கட்டிடம் கட்டுவோருக்கு சொத்துவரி உயர்வு எவ்வளவு?

புதிதாக கட்டிடம் கட்டுவோ ருக்கு சொத்துவரி சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூ.1.50 முதல் அதிகபட்சம் ரூ.2.50 வரை நிர்ணயித்து மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.

சொத்து வரி உயர்வு

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப் பட்டு உள்ளது. கடந்த மாதம் 1-ந் தேதிக்கு பின்னர் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மண்டல வாரியாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 100 வார்டுகளில் உள்ள பகுதிகள் மண்டலம் ஏ (பஸ் வழித்தடங்கள் பகுதிகள்), மண்டலம் பி (பிரதான சாலை பகுதிகள்), மண்டலம் சி (மற்ற பாதைகள்), மண்டலம் டி (குடிசைப்பகுதி மற்றும் குறைவான வளர்ச்சி அடைந்த பகுதி) என்று வரையறை செய்யப்பட்டு உள்ளது.

ஏ பிரிவு பகுதிகள்

ஏ பிரிவில் சதுர அடிக்கு குடியிருப்புகளுக்கு ரூ.2.50, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.4.40, தொழிற்சாலை கட்டிடத்துக்கு ரூ.5, வர்த்தக கட்டிடத்துக்கு ரூ.7.50, சிறப்பு கட்டிடத்துக்கு ரூ.10, நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.25 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி பிரிவில் சதுரஅடிக்கு குடியிருப்புகளுக்கு ரூ.2.20, கல்வி நிறுவனத்துக்க ரூ.3.85, தொழிற்சாலைக்கு ரூ.4.40, வணிக கட்டிடத்துக்கு ரூ.6.60, சிறப்பு கட்டிடத்துக்கு ரூ.8.80, நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.22 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வருவாய் அதிகரிக்கும்

சி பிரிவில் சதுரஅடிக்கு குடியிருப்புகளுக்கு ரூ.1.70, கல்வி நிறுவ னம் ரூ.3, தொழிற்சாலை ரூ.3.40, வர்த்தகம் ரூ.5.10, சிறப்பு கட்டி டம் ரூ.6.80 நட்சத்திர ஓட்டல் ரூ.17 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டி பிரிவில் சதுரஅடிக்கு குடியிருப்புக்கு ரூ.1.50, கல்வி நிறுவனம் ரூ.2.65, தொழிற்சாலை கட்டிடம் ரூ.3, வர்த்தக கட்டிடம் ரூ.4.50, சிறப்பு கட்டிடம் ரூ.6, நட்சத்திர ஓட்டல் ரூ.15 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி வருவாய்த்துறையினர் கூறும்போது, புதிய கட்டிடங்கள் கட்டுவோருக்கு இது பொருந்தும். புதிய வரி சீரமைப்பு மூலம் மாநகராட்சிக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்றனர்.