கோவை; ஹேண்ட்பால் இறுதிப் போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி அணி, 27-24 என்ற கோல்களில் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணியை வென்றது.
இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையே, 17வது மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி, பி.எஸ்.ஜி,. தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.
ஆண்களுக்கான இப்போட்டியில், 10 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, 21-12 என்ற கோல்களில், கற்பகம் இன்ஜி., கல்லுாரியை வென்றது.
தொடர்ந்து, மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் டாக்டர் மகாலிங்கம் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இடையேயான போட்டி, 14-14 என்ற கோல்களில் சமனில் முடிந்தது. கொங்கு இன்ஜி., கல்லுாரி அணி, 20-16 என்ற கோல்களில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
தியாகராஜா இன்ஜி., கல்லுாரி, 17-9 என்ற கோல்களில் கற்பகம் இன்ஜி., கல்லுாரியையும், கிண்டி இன்ஜி., கல்லுாரி, 18-14 என்ற கோல்களில் தியாகராஜா இன்ஜி., கல்லுாரியையும், டாக்டர் மகாலிங்கம் கல்லுாரி, 34-15 என்ற கோல்களில் எம்.குமாரசாமி இன்ஜி., கல்லுாரியையும் வீழ்த்தின.
தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, 27-24 என்ற கோல்களில், பி.எஸ்.என்.ஏ., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியை வென்று முதலிடம் பிடித்தது.
பி.எஸ்.ஜி., அலுமினி அணி, 30-25 என்ற கோல்களில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.