பிறந்த நாளில் இயக்குனர் உருக்கம் ,’பாரதி’ படம் உருவானது எப்படி?

0
13

கோவை; கோவை பாரதி பாசறை சார்பில், பாரதி விருது வழங்கும் விழா, ராம்நகரில் உள்ள சபர்பன் பள்ளி அரங்கில் நேற்று நடந்தது.

இந்த ஆண்டுக்கான பாரதி விருது, ‘பாரதி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கு, பாரதி பாசறை ரமணிசங்கர் வழங்கினார்.

இயக்குனர் ஞான ராஜசேகரன் பேசியதாவது:

நான் முதலில் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலைதான் திரைப்படமாக எடுத்தேன். அதன் பிறகு படம் எடுக்கும் எண்ணம் இல்லை. கேரளா, திருச்சூர் மாவட்ட கலெக்டராக இருந்த போது, கேரள இளைஞர் ஒருவர் என்னிடம் வந்து, மகாகவி பாரதி பற்றி படம் எடுங்கள் என்றார். அவர் சொன்ன அந்த நிமிடத்தில் இருந்து, பாரதியை பற்றி படம் எடுக்க முடிவு செய்து விட்டேன்.

அந்த படத்தில் பாரதியை, மகாகவியாக சித்தரித்து நான் படம் எடுக்கவில்லை. பாரதி என்ற இயல்பான மனிதனை பற்றிதான் படம் எடுத்தேன். அந்த மனிதனுக்குள் இருக்கும் மகாகவியை, மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். கோவையில் 100 நாட்கள் அப்படம் ஓடியது.

இன்றைக்கு தமிழ் சினிமா, வேறு திசையை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. ஒரே கதையை மாற்றி மாற்றி எடுக்கின்றனர். படம் முழுவதும் வன்முறைதான் நிறைந்து இருக்கிறது.தமிழ் சினிமாவின் இந்த போக்கு மாறவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாசறை தலைவர் மோகன் சங்கர், செயலாளர் ஜான்பீட்டர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.