ஆர்ய வைத்திய பார்மசி, 2024ம் ஆண்டுக்கான பிருஹத்ரயீ ரத்னா விருதை, வைத்தியர் வாசுதேவனுக்கு அறிவித்துள்ளது.
ஆர்ய வைத்திய பார்மசியின் நிறுவனரான ஆர்ய வைத்தியன் ராம வாரியாரின் நினைவைப் போற்றும் வகையில், ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த பங்களிப்புகளை செய்துள்ள தனிநபர்களை அங்கீகரித்து பாராட்ட, இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த, கோவை ஆர்ய வைத்திய பார்மசியில் வைத்தியராக இருந்து வரும் வாசுதேவனுக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீசி தேவிதாஸ் வாரியார் கூறியதாவது:
ஆயுர்வேதத்தின் பாரம்பரியங்களையும், மரபுகளையும் பேணி பராமரிப்பதில் வாசுதேவனின் நம்பிக்கையும், விடாமுயற்சியும், தற்காலத்தில் உடல்நலத்திற்கான தேவைகளை நவீன முறையில் பூர்த்தி செய்யும் திறனும், அவருக்கு உள்ளது.
வரும், 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை டேராடூனில் நடைபெறும், 10வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் நிகழ்வின் போது, வாசுதேவனுக்கு பிருஹத்ரயீ ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.