பிரம்ம தீர்த்தம் கிணறு தூர்வாரப்பட்டது; 70 மூட்டைகளில் காணிக்கை கட்டி வைப்பு

0
8

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதசுவாமி கோவில் கிணறு 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் சன்னதி பின்புறம், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம் கிணறு 70 அடி ஆழமும், 20 அடி அகலமும் கொண்டது. இந்த கிணறு 25 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதனால் நீரை கோவிலின் எந்த பயன்பாட்டிற்கும் எடுக்க முடியவில்லை. மேலும்,பக்தர்கள் ஒரு சிலர் காணிக்கையை உண்டியில் செலுத்தாமல் கிணற்றில் போட்டுவிட்டு செல்வார்கள்.

இதுதொடர்பாக உள்ளூர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கிணற்று நீரை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் தூர்வாரும் பணி கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட காணிக்கைகள் 70 மூட்டைகள், 9 பெட்டிகளில் சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இவற்றை கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா நேற்று கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். கிணற்று நீர் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.