பிரதான ரோடுகளை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

0
7

உடுமலை : உடுமலையில் பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து போலீசார் முன் வர வேண்டும்.

உடுமலையில், பழநி ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஐஸ்வர்யா நகர், அனுஷம் நகர் ரோடு, ராஜேந்திரா ரோடு, கச்சேரி வீதி, அரசு மருத்துவமனை ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து, பொக்லைன் வாகனங்கள், லாரிகள், கார், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால், நகர ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. பிரதான ரோடுகள், பார்க்கிங் மையமாக மாற்றப்படுகிறது.

அதே போல், டி.எஸ்.பி., அலுவலகம், வனத்துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய பிரதான அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில், ரோட்டை மறித்து ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எனவே, பிரதான ரோடுகள் வாகன நிறுத்தங்களாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையில், கடும் நடவடிக்கை எடுக்கவும், போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும் வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.