பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

0
87

குழந்தை கொலை

கோவை பீளமேடு விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 27), பால் வியாபாரி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி கோவையை சேர்ந்த 2½ வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அந்த குழந்தையை அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரகுநாதனை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை செய்தல், குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போக்சோ ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆயுள் தண்டனை

இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது-. விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ரகுநாதனுக்கு, குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரிவுக்காக 5 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து போலீசார், ரகுநாதனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.