முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் சஞ்சீவ் பல்யாண். இந்த நிலையில் 2 மாணவர்கள் மூத்த மாநில உயரதிகாரிகளிடம் எம்.பி. போன்று மொபைல் போன் வழியே பேசி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், 2 மாணவர்களும் எம்.பி. சஞ்சீவ் போன்று போனில் பேசி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.