பாரதிமன்ற முப்பெரும் விழா பங்கேற்க வந்தது அழைப்பு

0
7

அன்னூர் : அன்னூரில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

அன்னூர் பாரதி சிந்தனையாளர் பணி மையம் மற்றும் கோவை பாரதி மூத்தோர் பாலர் அறக்கட்டளை சார்பில், பாரதி விழா, புத்தக வெளியீட்டு விழா மற்றும் மருத்துவர் கோவியின் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா, இன்று (19ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு அன்னூர், தாசபளஞ்சிக மண்டபத்தில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர அடிகள், முன்னாள் துணைவேந்தர்கள் சுப்பிரமணியம், மார்க்கண்டன் ஆகியோர் பேசுகின்றனர்.

பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவும், கவிஞர்கள் பங்கேற்கும் பாரதி குறித்த கவியரங்கமும் நடக்கிறது. விழாவில் அனைவரும் பங்கேற்க, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.