பாசியில் இருந்து டீசல் உற்பத்தி; பல்கலை மாணவர்களுக்கு பரிசு

0
8

நன்னீர்ப் பாசியில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, வேளாண் பல்கலை மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கோவை, வேளாண் பல்கலையில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில் நுட்ப மையத்தின் ‘இ-யுவா’ மற்றும் காக்ஸ்பிட் நிறுவனம் சார்பில் அக்ரி பிட்ச் 2.0 போட்டி நடந்தது. வேளாண் சார் புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்து இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதில், பல்கலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர்கள் ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, ஆண்டோ ரஷ்வின் ஆகியோரின் கண்டுபிடிப்புக்கு 2ம் பரிசு கிடைத்தது.

வாகனப்போக்குவரத்தால், கார்பன் உமிழ்வு அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்னைக்குத் தீர்வாக, நன்னீர்ப்பாசியில் இருந்து கார்பனைச் சேகரித்து, அதன் வாயிலாக உயிரி எரிபொருளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இம்மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்துக்கு, அக்ரி பிட்ச் 2.0வின் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வணிக ரீதியாக செயல்படுத்தும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை, துறை பேராசிரியர்கள், பல்கலை நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

— நமது நிருபர் –