பாக். எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநில முதல்வர்கள் ஆலோசனை

0
1

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் பாக்., எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினர்.

கடந்த மே 6ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் வான் வெளி பாதுகாப்பை உடைத்து இந்தியா பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட நகரங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.