தேங்கி நிக்குது
சுந்தராபுரம், எல்.ஐ.சி., காலனி முதல் வீதி, இளங்கோ நகரில், கடந்த மூன்று வருடங்களாக கழிவுநீர் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. பலமுறை சொல்லியும், பல மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படியே இருக்குது
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முன், பல மாதங்களாக, சாக்கடை திறந்த நிலையிலேயே இருக்கிறது. கல்லுாரி நுழைவு வாயிலும் புதர்மண்டி கிடக்கிறது. சாக்கடையில் யாராவது தவறி விழும் முன் இதை சீரமைத்து, புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–பாலமுருகன், காந்திபுரம்.
தாங்கல துர்நாற்றம்
மாநகராட்சி வார்டு 33ல், கவுண்டம்பாளையம் ராமகுட்டி லே-அவுட் பகுதியில், சாக்கடை நிரம்பியும், துார் வாரப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு, இப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். இதை முறையாக அகற்றி, சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
–ராஜேந்திரன், கவுண்டம்பாளையம்.
திக்… திக்… பயணம்
போத்தனுார் கடை வீதியில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் சாலையில் பெயர்ந்து கிடக்கும் பகுதியில், வாகன ஓட்டிகள் பலரும் தடுமாறி விழுகின்றனர். இதே போல் பல இடங்களில் இருக்கிறது. பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— சிவராஜ், போத்தனுார்.
சுகாதார சீர்கேடு
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, உபயோகிக்கும் உக்கடம் பேருந்து நிலையத்தில், மூடப்பட்ட கட்டணக் கழிப்பறை செப்டிக் டேங்க் உடைந்து, கால்வாய் போல வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. -மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– -வேலுமணி, கோவை