பவானி ஆற்றில் மேலும் ஒரு… புதிய பாலம்! மதிப்பீடு பணி தீவிரம்

0
12

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள தற்போதைய பவானி ஆற்று பாலத்தின் அருகில் கூடுதலாக, ஒரு புதிய பாலம் கட்டப்பட உள்ளது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறையினரால் திட்ட மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ‘புதிய பாலம் கட்டப்படும் அதே நேரத்தில் பழைய பாலத்தை சீரமைத்து, இரண்டு பாலங்களிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையத்தில் ஊட்டி செல்லும் சாலையில், பவானி ஆற்றுக்கு நடுவே 40 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் பாலம் மாநில நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் செல்வதற்கும், நீலகிரி வழியாக கர்நாடகா, கேரளா மாநிலம் செல்வதற்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பவானி ஆற்று பாலம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழந்து வருகிறது. பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த பாலத்தை கடக்கின்றன. கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்லும் போது, அதிர்வு ஏற்படுகிறது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பாலத்தில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சமடையும் நிலை உள்ளது. இதையடுத்து, பவானி ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது உள்ள கான்கிரீட் பாலத்திற்கு

விடுத்தனர். இந்நிலையில், தற்போது உள்ள கான்கிரீட் பாலத்திற்கு அருகிலேயே புதிய ஆற்று பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை முடிவு செய்ததுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பவானி ஆற்றில் நான்கு வழிச்சாலைக்கு ஏற்றார் போல் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்ததும், இரு மாதங்களில், புதிய பாலம் கட்ட பணிகள் துவங்கப்படும். அதே நேரத்தில் பழைய பாலத்தை சீரமைத்து, இரண்டு பாலங்களிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்படும்,”