பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்

0
55

காலாவதியான பஸ்களை மாற்றி புதிய பஸ்களை வாங்க வேண்டும். அரசு போக்குவரத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும், வரவுக்கும், செலவுக்கும் இடைப்பட்ட தொகையை ஈடுகட்ட தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். பஸ்களை முறையான பராமரிப்பு செய்ய உதிரி பாகங்களை வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை அரசு திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆட்கள் நியமிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 14-ந்தேதி கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி பொள்ளாச்சியில் பிரசார இயக்கம் நடைபெற்றது. கோவை மண்டல பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி முருகையாக கலந்துகொண்டு பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரத்தில் பேசினார்கள். இதில் கோவை மண்டல தலைவர் வேளாங்கண்ணி ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.