கோவை, மார்ச் 11: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 12 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த கிரிக்கெட் போட்டியில், நேஷனல் மாடல் பள்ளி அணியுடன் சிஎஸ் அகாடமி அணி மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த நேஷனல் மாடல் பள்ளி அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து மொத்தம் 26 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த சிஎஸ் அகாடமி 1.1 ஓவரில் விக்கெட்கள் எதுவும் இழக்காமல் 27 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டி கோவை சிஐடி கல்லூரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அணியுடன் ஜெயந்தர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி மோதியது. இதில், மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த ஜெயந்தர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி சார்பாக விளையாடிய ஹர்ஷத் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.