கோவை; நிர்மலா மகளிர் கல்லுாரியில் இரு நாட்கள் நடக்கவிருந்த, ‘ஹேண்ட்பால்’ போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி, நிர்மலா மகளிர் கல்லுாரியில் கடந்த, 13, 14ம் தேதிகளில் நடக்கவிருந்தது. இதற்கு, 10 கல்லுாரி அணிகள் பதிவு செய்திருந்தன. இந்நிலையில், மழை காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. போட்டி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.