பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுகிறது !

0
110
வாஷிங்டன்,
இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கம் கூகுள் பிளஸ்  2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் நிறுவனம் தொடங்கியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.   பயன்பாட்டாளர்கள் குறைந்து வருவதாலும், தொழில்நுட்பக் கோளாறு ஆகிய காரணங்களுக்காகவே கூகுள் ப்ளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது