பம்ப் தொழில்நுட்பம் பல்கலை மாணவர் ‘விசிட்’

0
16

கோவை; கோவை, வேளாண் பல்கலை, 3ம் ஆண்டு, பி.டெக்., வேளாண் பொறியியல் மற்றும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மாணவர்கள், கோவையில் உள்ள ‘அக்வா’ குழுமத் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டனர்.

மாணவர்களுக்கு திறன்மிகு தொழிற்சாலை செயல்பாடுகளை விளக்கும் வகையில், இந்த தொழிற்சாலை நேரடி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலையின் லாஜிஸ்டிக் மேலாளர் சுரேஷ் குமார், மோட்டார் பம்புகள் தொழிற்சாலையின் செயல்பாடுகளை விவரித்தார். மாணவர்கள் அக்வா குழும நிறுவனங்களுக்குச் சென்று, பம்ப் தொழிற்துறையில், புதிய தொழில்நுட்பங்கள், ஆற்றல் மிக்க பம்ப்கள், ஆற்றல் தணிக்கைகள், விவசாய பம்புகள், குறிப்பிட்ட வகையான பயன்பாட்டு பம்ப்கள், உள்நாட்டு குழாய்கள், சோலார் பம்ப்கள், தொழிற்துறை 4.0 செயல்பாடுகள் மற்றும் ரோபோடிக்ஸ் நுண்ணறிவுகள் குறித்து அறிந்து கொண்டனர்.

கல்லூரி டீன் ரவிராஜ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.