பனப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

0
55

கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி கிராமத்தில் பனப்பட்டி கால்நடை மருத்துவ மையத்தின் சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், முகாமில் பனப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொண்டு வந்தனர். இதனையடுத்து அங்கிருந்த விவசாயிகள் மத்தியில் மருத்துவர் பரமேஸ்வரன் தடுப்பூசியின் நன்மைகள் குறித்தும், கால்நடைகளை எவ்வாறு கையாள்வது என்றும் தடுப்பூசியின் பயன்பாடு பற்றியும் எடுத்து கூறினார். மேலும் முகாமிற்கு கொண்டு வரப்பட்ட கால்நடைகள் அனைத்திற்கும் பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது.