பணி முடிந்து சென்ற எஸ். ஐ., விபத்தில் சிக்கி படுகாயம்

0
59

கோவை; பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி எஸ்.ஐ., படுகாயம் அடைந்தார்.

கோவை மாநகர், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் தனசேகரன், 57. இவர் உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தினமும் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

இதேபோல், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் பணி முடிந்து வடவள்ளி ஸ்டேஷனில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவர், ஆர்.எஸ் புரம், டி.பி., சாலைவழியாக சென்றார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று எஸ்.ஐ தனசேகரனின் இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தனசேகரன் துாக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்த எஸ்.ஐ., சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்