வால்பாறை; எஸ்டேட் பகுதியில் நடந்த பணிக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் மொத்தம் உள்ள 15 இடங்களில், 13 இடத்தில் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
வால்பாறை அடுத்துள்ளது முருகாளி எஸ்டேட்டில், தொழிலாளர் பணிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. தேர்தலில் ஐ.என்.டி.யு.சி., — எல்.பி.,எப்., — ஏ.டி.பி., — வி.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த, 15 பேர் போட்டியிட்டனர்.
இதில், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட, 13 பேர் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற பணிக்குழு உறுப்பினர்களுக்கு ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலாளர் கருப்பையா சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில், தொழிற்சங்க தலைவர் ராமசந்திரன், செயலாளர் மணி, துணை செயலாளர் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.