பட்டுக்கூடுக்கு நல்ல விலை விவசாயிகள் மகிழ்ச்சி

0
3

வெயில் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது.

கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 25 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெயில் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து பட்டுக்கூடு விலை உயர்ந்துள்ளது. நேற்று தரமான கூடு ஒரு கிலோ, 670 ரூபாய்க்கும், அடுத்த தரம் 540 ரூபாய்க்கும் விற்பனையாகியது.

விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஏப்ரல் முழுவதும், வெயில் கடுமையாக உள்ளது. இந்த வெப்பத்துக்கு பட்டுப்புழு உற்பத்தியாகாது. புழுக்கள் இறப்பு அதிகம் இருக்கும். அதனால் கூடு உற்பாதி குறைந்துள்ளது. பாதுகாக்கும் அளவுக்கு குறைவாக கூடுகள் வைத்து வளர்க்கிறோம். வெயில் குறைந்தால் சரியாகிவிடும். இந்த மாதம் முழுவதும் கூட்டுக்கு நல்ல விலை கிடைக்கிறது’ என்றனர்.