நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு பதக்கம்

0
80

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் நடந்தது.

இதில் பெண்கள் பிரிவில் கோவை நேரு ரைபிள் கிளப் மாணவி டுவிங்கிள் யாதவ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மாஸ்டர் உமன் பிரிவில் பிரீத்தி தங்கபதக்கம், 50 மீட்டர் ஓப்பன் செட் ரைபிள் பிரிவில் மாணவன் ஜெய்கிஷோர் தங்க பதக்கம், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கம் பெற்றனர்.

10 மீட்டர் ஓப்பன் செட் ஏர் ரைபிள் பிரிவில் மாணவன் சஜய் ஆண்கள் சப் யூத் மற்றும் ஜூனியர், சீனியர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார்.

மாஸ்டர் உமன் பிரிவில் மாணவி ஸ்வர்ணலதா தங்கபதக்கம், சப் யூத் உமன் பிரிவில் பிரியதர்ஷினிவெள்ளி பதக்கம் வென்றனர்.

சாதனை படைத்த மாணவர்களை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பாராட்டினார். இதில் நேரு கல்வி குழுமங்களின் தலை மை நிர்வாக அதிகாரியும், நேரு ரைபிள் கிளப் தலைவருமான டாக்டர் பி.கிருஷ்ணகுமார், செயலாளர் எஸ்.அஜய், நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் அ.முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.