கோவை, : நேரு கல்வி குழுமங்கள் சார்பில், பசுமையான போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், கல்வி நிறுவன வளாகத்தில் மாணவர்களின் வாகன பயன்பாட்டை குறைக்க, 25 சைக்கிள்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, நேரு கல்வி குழுமுத்தின் செயலாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணக்குமார் துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், பசுமை வளாகத்தை நோக்கி செல்லும் இந்த முயற்சி, சுற்றுச்சூழலுக்கும், மாணவர்களின் நலனுக்கும் உறுதுணையாக இருக்கும். பசுமையானஎதிர்காலத்துக்கான ஆதரவாகவும் இருக்கும், என்றார்.
நேரு கல்வி குழும முதல்வர்கள் அனிருதன், மணியரசனம், சிவராஜா, மோசஸ் டேனியல், ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.