நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் பலி

0
150
நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது. சுமார் 20 மைல் தூரம் கடந்து சென்றதும் காத்மாண்டு விமான நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது.
இந்நிலையில், தாடிங் – நுவக்கோட் மாவட்டங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜப்பான் நாட்டு பயணி உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். ஒரே ஒரு பெண் பயணி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.