நான் முதல்வராகிவிடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஓபிஎஸ் கூறியது உண்மை – தங்கதமிழ்ச்செல்வன்

0
117

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள்.திகார் சிறையில் இருந்து விடுதலையான என்னை ஓபிஎஸ், 2017 ஜூலை மாதம் சந்தித்தார்!  2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி, அவரை சந்தித்தேன்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது ஓபிஎஸ் கூறினார். முதல்வர் பழனிசாமியை  பதவியில் இருந்து இறக்க தயாராக இருப்பதாக கூறினார். எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார் என்று டிடிவி தினகரன் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இந்தநிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது:
டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை . நான் முதல்வராகிவிடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஓபிஎஸ் கூறியது உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.