நான் முதல்வன் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு இன்று துவங்குகிறது

0
6

கோவை: கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு முகாம் இன்று 29ம் தேதி துவங்குகிறது. இதில், அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான தேர்வு இன்று முதல் வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வு ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரிகளில் நடக்கிறது.

மெட்ரிக், சிபிஎஸ் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு இன்று நடக்கிறது. நாளை (30ம் தேதி) மெட்ரிக், சிபிஎஸ்சி, அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும், பிப்ரவரி 1ம் தேதி அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கும், பிப்ரவரி 2ம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் தேர்வு நடக்கிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் ஒரு பகுதியை தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் வழங்கும்.

தேர்வாகும் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை எச்சிஎல் டெக் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது. இன்டர்ன்ஷிப் பயிற்சியின் போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறலாம். பணியில் சேர்ந்தவுடன் ஆண்டிற்கு ரூ.1.96 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை பணிநிலைக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.