நடமாடும் சிகிச்சை வாகனங்கள் வந்தாச்சு! ‘காசநோய் இல்லாத கோவை’யை உருவாக்க

0
66

கோவை: கோவை மாவட்டத்தில், நேற்று முதல் மார்ச் 17ம் தேதி வரை தொடர்ச்சியாக, 100 நாட்கள் காசநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசநோய் தடுப்பு களப்பணியாளர்களுடன், ஒவ்வொரு பகுதிக்கும் இவ்வாகனம் நேரடியாகச் செல்லும்.

அப்பகுதியைச் சேர்ந்த சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் காசநோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, காசநோய் கண்டறியப்படும்.

காசநோய் தடுப்பு சிகிச்சையை தொடர்ந்து அளித்து, ‘காசநோய் இல்லாத கோவை’யை உருவாக்குவதற்கான பணிகள் துவக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்காக, கோவை மாவட்ட காசநோய் மையம் சார்பில், காசநோய் கண்டறியும் நடமாடும் நுண்கதிர் வாகனத்தின் இயக்கத்தை, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, ‘நியூ டவுன் ரோட்டரி’ செயலாளர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.