நஞ்சுண்டாபுரம் தரைப்பாலம் உடைப்பு

0
140

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சுண்டாபுரம் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

கோவையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து குளங்களும் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளலூர்-சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலம் 2-வது முறையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நஞ்சுண்டாபுரம் தரைப்பாலம்

இந்த நிலையில் நேற்று நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் நஞ்சுண்டாபுரம்-வெள்ளலூர் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் போத்தனூரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்று பாலம் பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கட்டைகள் ஆகியவை பாலத்தை அடைத்தும் பாதிப்பு ஏற்படுகின்றன. முட்புதர்கள் வளர்ந்தும் வெள்ளநீர் செல்ல தடை ஏற்படுத்துகிறது. எனவே நொய்யல் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நொய்யல் ஆற்றில் இருந்து உக்கடம் பெரியகுளத்துக்கு தண்ணீர் செல்லும் மதகுகளும் நேற்று திறக்கப்பட்டது.