தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

0
58

வால்பாறை பகுதியில் வனத்துறை சார்பில் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காட்டுயானைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு யானைகள் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டும் காட்டு யானைகளால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சேலம் பகுதியை சேர்ந்த ஸ்வார்டு கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல், நாடகம், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி, பச்சை மலை எஸ்டேட் பகுதியிலும், வில்லோணி எஸ்டேட், முடீஸ் பகுதியிலும் நடத்தப்பட்டது. பின்னர் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.