தோட்டத்தில் கள் விற்பனை; துடியலுாரில் இருவர் கைது

0
4

கோவை; துடியலுார் பகுதியில் தோட்டத்தில் கள் விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

துடியலுார் பகுதியில் சில இடங்களில், கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை செய்த போது, அங்கு கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அருகில் இருந்த மற்றொரு தோட்டத்திலும், கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

கள் விற்பனை செய்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த கார்த்திக், 26 மற்றும் அன்னுாரை சேர்ந்த அருள்செல்வம், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.