தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

0
84

துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

முன்னதாக அந்த காட்டு யானைகள் அப்பகுதியை சேர்ந்த மருதாசலம், ரவி, ஆறுச்சாமி ஆகியோரின் தோட்டங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளன.

இதேபோல தாளியூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை சுபக்குமார், ராஜகோபால், வெங்கடேஷ் ஆகியோரின் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. சம்பவ அறிந்த வந்த வனத்துறையினர் அந்த பகுதிகளை பார்வையிட்டு, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.