கோவை; மாநகராட்சி விதிக்கும் தொழில் வரி மற்றும் ரன்னிங் லைசென்ஸ் விஷயங்களிலிருந்து, குறுந்தொழில் முனைவோரை விடுவிக்க கோரி, மாநகராட்சி துணை கமிஷனரிடம் தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.
கோவையில் குறுந்தொழில் மேற்கொள்ளும், தொழில்முனைவோர் அனைவரும், தொழில் வரி மற்றும் ரன்னிங் லைசன்ஸ் பெற வேண்டும் என்று, மாநகராட்சி வற்புறுத்துகிறது. இவற்றை பெறாமல், தொழில் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே, பல்வேறு வரிச்சுமையால் குறுந்தொழில் முனைவோர் கடும் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், புதியதாக தொழில்வரி செலுத்துங்கள், ரன்னிங் லைசென்ஸ் பெறுங்கள் என்று, மாநகராட்சி பணியாளர்கள் வற்புறுத்துவதால், தொழில் முனைவோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலக்கு அளித்து, இந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.