தொரட்டி படநாயகியிடம் விசாரணை, நான் மாயமாகவில்லை, வீட்டில் தான் இருக்கிறேன் – போலீசில் விளக்கம்

0
97

சென்னை ஐகோர்ட்டில்பெருங்களத்தூரை சேர்ந்தஷமன்மித்ருஎன்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்தொரட்டிஎன்ற பெயரில் திரைப்படம் தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இந்த படத்தில்பொள்ளாச்சியை சேர்ந்தசத்தியா என்கிறசத்தியகலா(வயது 26) என்பவர் நடித்து இருந்தார். படப்பிடிப்புகள் முடிவடைந்து நாளை (வெள்ளிக்கிழமை) திரைப்படம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இதற்காகபத்திரிகையாளர்களுக்கு பேட்டிஅளிக்க முடிவு செய்த போது, கதாநாயகிசத்தியகலாமட்டும் வரவில்லை.

அவரை அவரதுதந்தை சட்டவிரோதமாகபிடித் துவைத்துள்ளார்.இதுதொடர்பாக கோவைமாவட்டம் மகாலிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேசத்தியகலாவைமீட்டுகோர்ட்டில்ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்சத்தியகலாதற்போது எங்கு உள்ளார்? என்று போலீசார் விசாரணை நடத்தி 5-ந்தேதிபதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதைதொடர்ந்துமகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு நடிகைசத்தியகலாவைபோலீசார் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம்சத்தியகலாகூறுகையில், நான் பெற்றோருடன் வீட்டில் தான் வசித்து வருகிறேன். நான் மாயமாகவில்லை. கருத்து வேறுபாடுகாரணமாக தயாரிப்பாளர்ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றார்.
நடிகைசத்தியகலாவிடம்பெறப்பட்ட விளக்கத்தை வருகிற 5-ந்தேதிகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தயாரிப்பாளருக்கும், நடிகைக்கும் இடையேசம்பள பிரச்சினைஇருந்துவந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டதாக போலீசார்தெரிவித்தனர்.