தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், தேவராயபுரம், தென்னமநல்லுார் ஆகிய, 10 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிய திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தேவராயபுரம் ஊராட்சி சார்பில், பி.டி.ஓ., ஜெயக்குமார் தலைமையில், கிராமசபை கூட்டம் வெள்ளெருக்கம்பாளையத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், குடிநீர் வினியோகம், சாக்கடை துார்வரவில்லை. தெருவிளக்கு எரிவதில்லை என, பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என, பி.டி.ஓ., ஜெயக்குமார் உறுதியளித்தார்.