கிணத்துக்கடவில் தொடர் மழையால் தக்காளிகள் அழுகின. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கின்றனர்.
தக்காளி சாகுபடி
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி சாகுபடி முக்கிய விவசாயமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகள் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு ஏலம் போனது.
இதற்கிடையில் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சீசன் தொடங்கியது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை சரிந்தது. ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அழுகும் தக்காளிகள்
இந்த நிலையில் தற்போது கிணத்துக்கிடவு பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடிகளில் விளைந்துள்ள தக்காளிகள் அழுகி வருகிறது. விவசாயிகள் தோட்டங்களில் இருந்து பறித்து வரும் தக்காளிகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும்போது, அழுகிய தக்காளிகளை குப்பையில் கொட்டி செல்கின்றனர்.
இதற்கிடையில் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சீசன் தொடங்கியது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை சரிந்தது. ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நஷ்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சீசன் தொடங்கும் நேரத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தக்காளிகள் அழுகி வருகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு, தவிப்பில் இருந்து வருகிறோம். மேலும் கிணத்துக்கடவு பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். சந்தைக்கு கொண்டு செல்லும் தக்காளிகள் அழுகி இருந்தால், அவை யாருக்கும் பயன்படாது என்பதால் குப்பையில் கொட்டி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.